இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் சர்பிரைசஸ் (Airtel Surprises) என்ற பெயரில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியதை தொடர்ந்து இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

"2 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் சர்பிரைசஸ் வழங்குவதில் ஆர்வமாக உள்ளோம். கூடுதல் சலுகைகளின் மூலம், எங்களது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை பெற முடியும்", என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமந்த் குமார் குருசுவாமி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தகவல்களின் படி ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாத வாக்கில் 2 மில்லியனை கடந்தது. புதிய சலுகையின் மூலம் ஏர்டெல் ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் திட்டத்தில் கூடுதல் டேட்டா பெற முடியும். இதே போல் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் மூவிஸ் சேவையையும் பயன்படுத்த முடியும். ஏர்டெல் மூவிஸ் சேவையில் 10,000க்கும் அதிகமான திரைப்படங்கள் வழங்கப்படுகின்றன.  


ஏர்டெல் சர்பிரைசஸ் திட்டத்தை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஏர்டெல் இணையத்தளம் சென்று பிராட்பேண்ட் சர்பிரைசஸ் பிரிவில் “surprise” ஆப்ஷனினை அன்லாக் செய்ய வேண்டும். நவம்பர் 30, 2016 வரை பிராட்பேண்ட் சேவை வழங்கும் டாப்-5 நிறுவனங்களின் பட்டியலில் பிஎஸ்என்எல் (9.95 மில்லியன் வாடிக்கையாளர்கள்), பாரதி ஏர்டெல் (2.03 மில்லியன்), அடிரா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் (1.14 மில்லியன்), எம்டிஎன்எல் (1.05 மில்லியன்) மற்றும் யு பிராட்பேண்ட் (0.60 மில்லியன்) இடம் பிடித்துள்ளன.

Post a Comment

 
Top