பதவி விலகிய
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு கூறிய பரபரப்பு குற்றச்சாட்டுகள்
அரசியல் அரங்கில் புதிய புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியான வண்ணம் உள்ளன.
முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா
தங்கியிருக்கும் போயஸ் கார்டனிலும் அவரவர் ஆதரவாளர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் இரு பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சமுக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருவதால், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான
சூழ்நிலையில், மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார்
பொதுச்செயலாளர் சசிகலா. இதற்காக போயஸ் கார்டனில் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்
மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர்
அங்கிருந்து ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. அப்போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்திய
சசிகலா, கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த வேண்டும் என
அறிவுரை வழங்கியுள்ளார்.
இக்கூட்டத்தில்
131 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டிருப்பதாக மூத்த தலைவர் செங்கோட்டையன்
தெரிவித்தார். எனவே, இந்த கூட்டத்தில், சசிகலா சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள்
கூட்டம் நடைபெறுவதையொட்டி, கட்சி அலுவலகம் உள்ள அவ்வை சண்முகம் சாலையில்
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment