ஜெயலலிதா மரணம்
அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா
நியமிக்கப்பட்டார்.
சசிகலா இடைக்கால
பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் புகார்
அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சசிகலாவுக்கு விளக்கம் கேட்டு தேர்தல்
ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில்
இடைக்கால பொதுச்செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அ.தி.மு.க. சட்டவிதியில் இல்லை
என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
புகார் குறித்து
ஆராய்ந்து தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்து உள்ளது.
அ.தி.மு.க.வின்
சட்டவிதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளரை நியமிக்க முடியும் என்றும்
தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளது.
ஏற்கனவே
தொடர்ந்து 5 ஆண்டுகள்
அ.தி.மு.க. கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலாளராக பதவியேற்க
முடியும் என்ற விதியை நீக்கிதான் சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக
பொறுப்பேற்றார்.
ஆனால் இடைக்கால
பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான விதி இல்லாததால் சசிகலாவின் பொதுச் செயலாளர்
பதவிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment