இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய Intex Aqua Q7N ஸ்மார்ட் போன், அதிக பட்சமாக ரூ. 3,900 என விலையிடப்பட்டு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் திரை 4.5 அங்குல அளவில் உள்ளது. இதன் பின்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறனுடனும் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதில் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகக் கிடைக்கிறது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு 3ஜி போன். இரண்டு சிம்களை (மைக்ரோ மற்றும் மினி) இதில் இயக்கலாம். லவுட் ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ ஜாக் 3.5 மிமீ தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய தொழில் நுட்ப வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். பிரவுசர் தரப்பட்டுள்ளது. எம்.பி. 3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்களுடன், டாகுமெண்ட் மற்றும் விடியோ எடிட்டர்கள் கிடைக்கின்றன.
நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. பின்புறக் கேமரா 5 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறனுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பேட்டரி 2000 mAh திறனுடன் உள்ளது.

Post a Comment

 
Top