சீனாவின் ஒன்
ப்ளஸ் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் தன்னுடைய ஒன் ப்ளஸ் 3 ஸ்மார்ட் போன் ஒன்றை, மத்திய நிலையில் விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில்
விற்பனைக்கு வந்துள்ள இந்நிறுவனத்தின் நான்காவது ஸ்மார்ட் போன் இது. இதன் அதிக
பட்ச விலை ரூ. 27,999.
இதன் பரிமாணம்
152.7 x 74.7 x 7.4 மிமீ. எடை
158 கிராம். இதில் இரண்டு நானோ சிம்களை இயக்கலாம். இதில் ஆப்டிக் Qualcomm கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 5.5 அங்குல அளவில்
தரப்பட்டுள்ளது. கார்னிங் கிளாஸ் 4 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிக்ஸெல்
அடர்த்தி 1080 x 1920
பிக்ஸெல்கள்
ஆகும். இதில் ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன்
ராம் மெமரி 6 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 64 ஜி.பி. இதில் கார்ட் ஸ்லாட் எதுவும்
தரப்படவில்லை. இதன் சிப் செட் Qualcomm
MSM8996 Snapdragon 820. குவாட் கோர் சி.பி.யு. மற்றும் Adreno 530 ஜி.பி.யு. ஆகியவை உள்ளன.
ஆட்டோ போகஸ், எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 16 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது.
Geo-tagging, touch focus, face
detection, panorama, HDR ஆகிய சிறப்புகள்
கொண்டுள்ளது. இதன் விடியோ பதியும் திறன் 2160p@30fps. முன்புறமாக அமைக்கப்பட்டுள்ள செல்பி கேமரா 8 எம்.பி. திறனுடன் உள்ளது.
இசை
ரசிகர்களுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக்,
லவுட் ஸ்பீக்கர்
தரப்பட்டுள்ளன. ரேடியோ இல்லாதது ஒரு பெருங்குறையாகும். நெட்வொர்க் இணைப்பிற்கு
வைபி, புளுடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. Fingerprint, accelerometer, gyro, proximity,
compass ஆகிய சென்சார்கள்
தரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் உள்ளன.
எச்.டி.எம்.எல்.
5 பிரவுசர் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டது.

Post a Comment