மிகக் குறைந்த விலையில் மொபைல் போன்களைத் தேடுவோருக்கென ஜியோனி நிறுவனம் அண்மையில் தன்னுடைய ஜியோனி எல் 700 மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. 

இதன் அதிக பட்ச விலை ரூ. 2,000 மட்டுமே. இதன் திரை 2.6 அங்குல அளவில் உள்ளது. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். இது ஒரு 2ஜி போனாக மட்டுமே பயன்படுத்தலாம். 

இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. ஆக உயர்த்திக் கொள்ளலாம். எப்.எம். ரேடியோ இயங்குகிறது. நேரடியாக பேஸ்புக் தளத்திற்கு இணைப்பு கிடைக்கிறது. பின்புறமாக மட்டும் இயங்கும் கேமரா 1.3 எம்.பி. திறன் கொண்டது. இதன் பேட்டரி 1700 mAh திறன் கொண்டது.

Post a Comment

 
Top