ஆதிக்
ரவிச்சந்திரன் இயக்கத்தில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு சிம்பு ஜோடியாக
ஸ்ரேயா நடிக்க, மற்றொரு சிம்புவுக்கு தமன்னா ஜோடியாக நடித்து
வருகிறார். இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிப்பது குறித்து தமன்னா கூறுகையில்
" இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
நான் இதில் நடிகையாக
வருகிறேன். மிகவும் துடிப்பான வேடம். சிம்புவுடன் மரத்தை சுற்றி பாட்டுப்பாடும்
நாயகி அல்ல. நடிக்க வாய்ப்புள்ள வேடம். இதனால்தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்
கொண்டேன்’’ என்றார்.

Post a Comment