சர்வர் சுந்தரம் படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சேதுராமன்
இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகிறார். விடிவி கணேஷ் தயாரித்து வரும்
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'சர்வர் சுந்தரம்' நாயகி வைபவி ஷாந்தாலியா சந்தானத்திற்கு ஜோடியாக
நடிக்க காமெடி நடிகராக விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.இந்நிலையில்
இப்படத்திற்கு 'சக்கப் போடு போடு ராஜா' என படக்குழு பெயர் சூட்டியுள்ளது.
முன்னணி
நடிகர்களின் படங்களில் இதுநாள்வரை காமெடி செய்துவந்த விவேக் இப்படத்தில் காமெடி
நடிகராக ஒப்பந்தம் ஆகியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உண்டு
பண்ணியிருக்கிறது. மேலும், இதன் காரணமாக
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Post a Comment