'போடா போடி', 'நானும் ரவுடிதான்' படங்களுக்குப்பின் விக்னேஷ் சிவன் இயக்கும்
புதிய படத்திற்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூர்யா ஹீரோவாக
நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்
செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில்
இப்படத்தின் பூஜை இன்று காலை ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் விமரிசையாக நடைபெற்றது.
இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஆர்.ஜே.பாலாஜி இயக்குனர்கள் பாண்டிராஜ், லிங்குசாமி, விக்னேஷ் சிவன்
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஸ்டுடியோ கிரீன்
சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.விரைவில்
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment