விவோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, அண்மையில் தன்னுடைய வி5 (vivo V5) ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. செல்பி எடுப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட் போன் மிகத் திறன் வாய்ந்த கேமராவினைத் தருகிறது. முதன்மையாக உள்ள பின்புறக் கேமரா 13 எம்.பி. திறனுடனும், இரண்டாவது நிலையில் உள்ள முன்புற செல்பி கேமரா 20 எம்.பி. திறனுடனும் கொண்டதாக அமைந்துள்ளது. எனவே, செல்பி கேமரா ரசிகர்கள் இந்த ஸ்மார்ட் போனை வாங்க விருப்பப்படலாம். பின்புறக் கேமராவுடன் எல்.இ.டி.ப்ளாஷ், ஆட்டோபோகஸ் வசதி ஆகியன தரப்பட்டுள்ளன. Geo-tagging, touch focus, face detection, panorama ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. விடியோ கேமராவாக இயங்கும்போது, 1080p@30fps திறனுடன் செயல்படுகிறது.
இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 153.8 x 75.5 x 7.6 மிமீ. எடை 154 கிராம். இதன் திரை 5.5. அங்குல அகலத்தில் 720 x 1280 பிக்ஸெல் அடர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டது. ஐ.பி.எஸ். டிஸ்பிளே தரும் எல்.சி.டி. திரையாக உள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய். ராம் மெமரி 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இரண்டு சிம்களை இயக்கலாம். ஆனால், மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்தும்போது சிம் ஸ்லாட்டில் தான் பயன்படுத்த வேண்டும். இதன் ப்ராசசர் ஆக்டோ கோர் திறன் கொண்டது. இதன் சிப் செட் MediaTek MT6750. இதனுடன் இணைந்து செயலாற்றும் ஜி.பி.யு. Mali-T860 MP2 ஆகத் தரப்பட்டுள்ளது.

இசை ரசிகர்களுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக், லவுட் ஸ்பீக்கர் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, 4ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. Fingerprint, accelerometer, proximity, compass என சென்சார் இயக்கங்கள் செயல்படுகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகளும் கிடைக்கின்றன. எம்பி3, எம்பி4 பிளேயர்கள், டாகுமெண்ட், போட்டோ மற்றும் விடியோ எடிட்டர்கள் செயல்படுகின்றன. இதில் அமைக்கப்பட்டுள்ள, வெளியே எடுக்க இயலாத லித்தியம் அயன் பேட்டரி 3000 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 17,980

Post a Comment

 
Top