டான்ஸ்மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, நடிகராகி, இயக்குனர் ஆனவர் பிரபுதேவா. தமிழில் விஜய் நடித்த போக்கிரி’ ‘வில்லுவிஷால் நடித்த வெடிஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல்படங்களை இயக்கினார். 

இந்த நிலையில் 5 வருடங்களுக்குப்பிறகு பிரபுதேவா மீண்டும் தமிழ் படம் ஒன்றை இயக்குகிறார்.

கருப்பு ராஜா வெள்ளை ராஜாஎன்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில், விஷால் கருப்பு ராஜாவாகவும், கார்த்தி வெள்ளை ராஜாவாகவும் இணைந்து நடிக்கிறார்கள். இதில் ஒரு நாயகியாக தமன்னா நடிக்க இருக்கிறார். மற்றொரு நாயகியை தேடி வருகிறார்கள். ஐசரிகணேஷ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Post a Comment

 
Top