‘எந்திரன்’
படத்தின் வெற்றியை
அடுத்து அதன் 2-வது படமாக ‘2.0’
படம் தயாராகி வருகிறது.
ரஜினியுடன் அக்ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட
பலர் நடிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படத்தின்
முதல் போஸ்டர் அடுத்த மாதம் 20-ந்தேதி
வெளியிடப்படுகிறது. ‘2.0’ படப்பிடிப்பு 75 சதவீத முடிந்து விட்டது. இந்த நிலையில் லைக்கா
நிறுவனத்தின் நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள செய்தியில்,'‘இந்திய சினிமா என்னவென்று உலகுக்கு காட்டும்
நேரம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு மாதம்தான். ‘2.0’ படம் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியும், கில்லாடியும் இந்திய சினிமா என்ன என்று
உலகுக்கு காட்டுவோம். அதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது’ என்று கூறியுள்ளார்.
‘2.0’ படத்தின் முதல்
போஸ்டர் வெளியாகும் அதே தினத்தில் டீசரும் வெளியாகவுள்ளதாகவும், அதைத்தான் லைக்கா நிறுவனம் இப்படி
வெளிப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment