விண்டோஸ் இயக்க
முறைமையில், விண்டோஸ் கீ
என்பது, விண்டோஸ்
இலச்சினை கொண்ட கீயாகும். மைக்ரோசாப்ட், இதனை முழுமையாகத் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பயன்படுத்தியுள்ளது. அவற்றை இங்கு பார்க்கும் முன்னர், இந்த கீ எப்போது அறிமுகமானது என்று
பார்க்கலாம்.
இந்த கீ முதன்
முதலில், 1994 ஆம் ஆண்டு,
Microsoft Natural keyboard என்னும் கீ
போர்டில் அறிமுகமானது. இதனை Windows key, startkey, logo key, flag key,
super key, command key or flag, home எனப் பல
பெயர்களில் அழைக்கின்றனர். இரண்டு விண்டோஸ் கீகளும், ஒரு மெனு கீயும் இணைக்கப்பட்டு தரப்பட்டன. எனவே,
அதுவரை 101/102 கீகள் கொண்டதாக இருந்த பெர்சனல் கம்ப்யூட்டர்
கீ போர்ட் அமைப்பு, இதன் பின்னர் 104-
/ 105 ஆக மாறியது.
ஒரு விண்டோஸ் கீ
இடது பக்கமாக அமைக்கப்பட்டிருந்த கண்ட்ரோல் (Ctrl) மற்றும் ஆல்ட் (Alt) கீகளுக்கு இடையே அமைக்கப்பட்டது. இன்னொரு
விண்டோஸ் கீ, சில கீ
போர்ட்களில் மட்டும் வலது புறமாக இடம் பெறும் ஆல்ட் கீ அருகே அமைக்கப்பட்டது. சில
கீ போர்ட்களில், இது இடம்
பெற்றிருக்காது. குறிப்பாக லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இருக்காது. விஸ்டா
சிஸ்டத்திற்கென வடிவமைக்கப்பட்ட கீ போர்டில், அனைத்து கீகளுக்கும் கீழே நடுவில்
அமைக்கப்பட்டது. இந்த விண்டோஸ் கீயினை இணைத்து, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், பல செயல்பாடுகளுக்கான சுருக்கு விசைகள்
தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Windows key + A: Action Center திறக்கப்படும்.
Windows key + S: கார்டனா
செயல்பாடு உள்ள இடங்களில், டெக்ஸ்ட் அமைக்க
இது பயன்படும். இதே செயல்பாட்டினை Windows key + Q கீகளும் மேற்கொள்ளும்.
Windows key + C: கார்டனா நாம்
சொல்வதைக் கேட்டு செயல்படும் தன்மை கொண்ட கம்ப்யூட்டரில் இந்த கீகள் இணைப்பு
செயல்படும்.
இது "Hey,
Cortana" என்பதற்கு இணையானது.
Windows key + E: பைல்
எக்ஸ்புளோரர் திறக்கப்படும்.
Windows key + F: Windows 10 Feedback Hub திறக்கப்படும்.
Windows key + Ctrl + F: நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர்களை இந்த மூன்று கீகள்
இணைப்பு தேடித் தரும்.
Windows key + G: Game bar திறக்கப்படும்.
Windows key + H: Share sidebar திறக்கப்படும்.
Windows key + I: Settings menu திறக்கப்படும்.
Windows key + K: புதிய புளுடூத்
சாதனங்களை இணைப்பதற்காக Connect sidebar இயக்கப்படும்.
Windows key + L: உங்கள்
கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
Windows key + O: திரை அமைப்பு
லாக் செய்யப்படும்.
Windows key + P: Presentation/projection sidebar திறக்கப்படும்.
Windows key + R: டாஸ்
கட்டளைகளுக்கான Run window இயக்கப்படும்.
Windows key + U: Ease of Access மையம் செயல்பாட்டிற்கு வரும்.
Windows key + Spacebar: உள்ளீடு செய்வதற்கான மொழி மற்றும் கீ போர்ட் வடிவமைப்பினைத் தேர்ந்தெடுக்க.
Windows key + (+) or (----):மேக்னிபயர் பெருக்கமும், குறைப்பும் இந்த
இரு கீகளைக் கொண்டு மேற்கொள்ளலாம்.
Windows key + Esc: மேக்னிபயர்
இயக்கத்தினை முடித்து வைக்கும்.
Post a Comment