அஜித் மூன்றாவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். அப்புக்குட்டியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி, தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் தேர்வு சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. முதலில், இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியது. ஆனால், இது வெறும் புரளி என்றும் கூறப்பட்டது.



இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. இருப்பினும், இன்னும் சில தினங்களில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் யார்? என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Post a Comment

 
Top