ZTE நிறுவனம் கடந்த
திங்களன்று அதன் நான்காவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியதுடன், நூபியா Z11 மினி எஸ் என்ற
ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நூபியா Z11, நூபியா Z11 மேக்ஸ்
மற்றும் நூபியா Z11 மினி ஆகிய
ஸ்மார்ட்போன்களி்ன் வரிசையை தொடர்ந்து ZTE நூபியா Z11 மினி எஸ் நிறுவனத்தின் 4வது
ஸ்மார்ட்போனாகும். இந்த ZTE நூபியா Z11 மினி எஸ் ஸ்மார்ட்போன் சீனாவில்
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் 64ஜிபி வகை CNY 1,499 (சுமார் ரூ.14,867) விலையிலும் மற்றும்
128ஜிபி வகை CNY 1,899 (சுமார்
ரூ.18,834) விலையிலும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 25ம் தேதி முதல்
விற்பனைக்கு செல்லும்.
டூயல் சிம் ஆதரவு
கொண்ட ZTE நூபியா Z11 மினி எஸ்
ஸ்மார்ட்போனில் நூபியா UI 4.0
அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. ZTE நூபியா Z11 மினி எஸ்
ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.20 இன்ச்
ஐபிஎஸ் திரை உடன் 2.5D வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே
இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் உடன் இணைந்து 2.0GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 200ஜிபி வரை விரிவாக்கக்கூடிய
64ஜிபி மற்றும் 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ZTE நூபியா Z11 மினி எஸ்
ஸ்மார்ட்போனில் PDAF, f/2.0 அபெர்ச்சர், சபையர் லென்ஸ், எல்இடி ஃபிளாஷ்
கொண்ட 23 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் சோனி IMX25 சென்சார், PDAF, f/2.2 அபெர்ச்சர், 5பி லென்ஸ்
எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
இந்த
கைப்பேசியில் 3000mAh பேட்டரி திறன்
மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.10, 3.5மிமீ ஆடியோ
ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ, USB Type C மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இது தங்கம், வெள்ளி, தங்கம் உடன்
கருப்பு ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.
ZTE நூபியா Z11 மினி எஸ் ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:
டூயல் சிம்
பொது
வடிவம் காரணி:
டச் ஸ்கிரீன்
பேட்டரி திறன் (mAh): 3000
நீக்கக்கூடிய
பேட்டரி: இல்லை
வண்ணங்கள்:
தங்கம், வெள்ளி, தங்கம் உடன்
கருப்பு
டிஸ்ப்ளே
திரை அளவு: 5.20
டச் ஸ்கிரீன்:
ஆம்
தீர்மானம்: 1080x1920 பிக்சல்கள்
ஹார்டுவேர்
ப்ராசசர்: 2GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 4ஜிபி
உள்ளடங்கிய
சேமிப்பு: 64ஜிபி
விரிவாக்கக்கூடிய
சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய
சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 200ஜிபி
கேமரா
பின்புற கேமரா:
23 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 13
மெகாபிக்சல்
சாஃப்ட்வேர்
ஆப்பரேட்டிங்
சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
ஸ்கின்: நூபியா UI 4.0
இணைப்பு
Wi-Fi 802.11 ac
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 4.10
3.5மிமீ ஆடியோ
ஜாக்
USB Type C
மைக்ரோ-யூஎஸ்பி OTG
ஜிஎஸ்எம்
3ஜி
4ஜி எல்டிஇ
சென்சார்கள்:
காம்பஸ்/மக்னேடோமீட்டர்
ப்ரொக்ஷிமிட்டி
சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட்
சென்சார்

Post a Comment