ரஜினி அரசியலுக்கு
வருவதை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் வரவேற்றுள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட
கருத்துகணிப்புகளும் ரஜினிக்கு சாதகமாக உள்ளன. ஆனால் ரஜினியிடம் இருந்து இதுவரை
அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ரசிகர்களுடன்
முதல்கட்ட சந்திப்பை முடித்த ரஜினி தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். அடுத்த மாதம் (ஜூலை) அவர் மீண்டும்
ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்பிறகே அவர்
அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்
ரஜினிகாந்த் தனது பிறந்த நாளான டிசம்பர் மாதம் 12-ந்தேதி அரசியல் பிரவேசம்
தொடர்பான அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார் என்று தெரியவந்துள்ளது. ரஜினிக்கு
மிகவும் நெருக்கமான ஒருவர் இதை உறுதிபடுத்தி உள்ளார். ரஜினி அரசியலுக்கு வரும்
முடிவில் உள்ளார். தொண்டர்களுடன் கலந்து பேசி விட்டு அவர் பிரமாண்ட கூட்டத்தை
கூட்டி தனது முடிவை வெளியிட வியூகம் வகுத்துள்ளார்.
பிறந்த நாள்
அன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் தன் ரசிகர்களிடம் இரட்டிப்பு
மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்த முடியும் என்று ரஜினி
நினைக்கிறார். இந்த அறிவிப்பு வெளியாகும். அடுத்த சில மாதங்களில் ரஜினி நடித்துள்ள
‘2.0’ மற்றும் ‘காலா’ படங்கள் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment