ஆர்யா நடித்து வரும் புதிய படம் கடம்பன்’. இப்படத்தில் ஆர்யா மலைவாழ் மக்கள் கூட்டத்தில் உள்ளவராக நடிக்கிறார். இப்படத்திற்காக தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக உருவாக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை வருகிற மார்ச் 2-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இந்த டிரைலரை நடிகர் சூர்யாவும், மாதவனும் இணைந்து வெளியிடவுள்ளனர். மார்ச் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்த டிரைலர் வெளியிடப்படுகிறது.


Post a Comment

 
Top