எஸ்.எஸ்.ராஜமௌலி
இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு
வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’.
இரண்டு பாகமாக
எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை
படைத்தது. இதனால், இப்படத்தின்
இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,
இரண்டாம் பாகத்தில்
படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன்ஊடே இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளும்
நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. முதல் பாகத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை அமைத்த
ஆர்.சி.கமலக்கண்ணனே இந்த பாகத்திலும் பொறுப்பேற்றிருக்கிறார்.
அவருடைய
தலைமையில் 33 ஸ்டுடியோக்களில்
இரண்டாம் பாகத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக அவரே தெரிவித்துள்ளார்.
மேலும், 15 மாதத்திற்கு
முன்பே இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் அவரே தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஏப்ரல் 28-ந் தேதி இப்படம்
வெளிவரவிருக்கிறது. அதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment