ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, ஆழ்ந்த உறக்கம், அமைதியான ஆனந்தமான மனநிலை, இவை அனைத்துமே தோலின் பொலிவை மேம்படுத்தும் சில இயற்கையான வழிகள்.
முகத்தில் தேவையற்ற செயற்கைப் பூச்சுக்கள், கிரீம்களை பயன்படுத்துதலைத் தவிர்க்க வேண்டும்.
முகப்பரு உடையவர்கள் அனைத்து அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அழகு சிகிச்சை நிலையங்களில் செய்யப்படும் பேசிஷியல், ப்ளீச்சிங் போன்றவற்றை மாதம் ஒரு முறை செய்து கொள்ளலாம்.
தினமும் 2&3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
வெயிலில் அதிகமாக பணிபுரிவோர், சன்ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்தலாம்.
தோலில் வறட்சி தன்மை கொண்டவர்கள் Moisturizers பயன்படுத்தலாம்.
முகத்தில் பப்பாளி அறைத்து பூசுதல், கருவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்தல் போன்றவை நமக்கு தீமை இல்லாவிட்டாலும் இந்த பொருட்களை உணவில் தினமும் உட்கொண்டால் தோல் பொலிவு பெறும்.
அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப, ஆடைகள் உடுத்துதல் தேவையற்ற தோல் நோய்களைத் தவிர்க்கும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் தோலில் பயன்படுத்தக் கூடாது.
வாழ்க்கை முறை மாற்றம் (Life style modification) நம்முடைய தோலுக்கு மட்டுமல்ல, நம்முடைய ஆரோக்கியத்திற்கும் அவசியத் தேவை.

Post a Comment

 
Top