தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா
பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. வேலையில்லாப் பட்டதாரிகளின் வலிகளை எடுத்துக்
காட்டிய இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வசூலை வாரிக் குவித்தது.
படம் வெளியாகி
இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக
தனுஷ் சமீபத்தில் அறிவித்தார். தமிழ், தெலுங்கு என
இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் வேலையில்லாப் பட்டதாரி-2 வை தனுஷின்
மைத்துனி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க அனிருத், ஷான் ரோல்டன்
இருவரும் இசையமைக்கிறார்கள்.
இந்நிலையில்
இப்படத்தில் தனுஷின் ஜோடியாக நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கப் போவதாக
செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஹீரோயின் குறித்த விவரங்களை படக்குழு
இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment