நடிகர்
சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பற்பல நல்ல விஷயங்கள்
நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,
வருகிற நவ.27-ந் தேதி
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும், பாராட்டு
விழாவும் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவுக்கு
பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் கூறும்போது,
மூத்த
கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. செவாலியே விருது பெற்றதற்காக நடிகர்
கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தவிருக்கிறோம் என்றார். மேலும், முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் பூரண நலம்
அடைந்து வீடு திரும்ப பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.

Post a Comment