தருமபுரி
அருகேயுள்ள கடகத்தூர் அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள கம்பியாள் தொழில்பிரிவில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கடகத்தூர் அரசு தொழில்பயிற்சி
நிலையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: கடகத்தூரில் உள்ள தொழில்பயிற்சி
நிலையத்தில் காலியாக உள்ள கம்பியாள் பயிற்றுநர் பணிக்கு தொகுப்பூதியம்
அடிப்படையில் ஒப்பந்த பயிற்றுநர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (அருந்ததியர்)
இன மகளிர் முன்னுரிமைப் பதிவர்/ஆதரவற்ற விதவை இனசுழற்சி அடிப்படையில்
நிரப்பப்படவுள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஈராண்டு
கம்பியாள் தொழில்பிரிவில் தேசிய தொழில்சான்று மற்றும் தேசிய தொழில் பழகுநர் சான்று
பெற்றிருக்க வேண்டும். மேலும், மூன்றாண்டு முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்ச வயது 2016 ஜூலை 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
தகுதியான நபர்கள் கல்வித்தகுதி, வயது, ஜாதி மற்றும் உரிய சான்று நகல்களுடன்
புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை, சுயமுகவரியிட்ட
தபால்தலை ஒட்டப்பட்ட உறையுடன், வரும் நவ.11 அன்று மாலை 5 மணிக்குள் முதல்வர்
அரசினர் தொழில்பயிற்சி நிலையம், கடகத்தூர், செல்லியம்பட்டி அஞ்சல், பாப்பாரப்பட்டி வழி, தருமபுரி-636809 என்ற முகவரிக்கு வந்து
சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை
செய்யப்பட்டு, தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் நேர்முகத்
தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment