சிவகார்த்திகேயன்
நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படம் வசூல் சாதனை
படைத்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக மோகன் ராஜா
இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.
24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக
நடிகை பிரபல நடிகை ரோகிணி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி தொடங்கவுள்ளதாக
கூறப்படுகிறது.
ரோகிணி நவம்பர்
14-ந் தேதி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில்
மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment