சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடாபடம் வருகிற நவம்பர் 11-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் பில்லா -3படத்தில் சிம்பு நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், ‘நேரம்’, ‘பிரேமம்ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படமொன்றில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம்படம் மலையாள ரசிகர்களை மட்டுமில்லாது, தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது.


மலையாள படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்யாத வசூல் சாதனையை இந்த படம் செய்தது. இந்நிலையில் சிம்புவுடன் அல்போன்ஸ் புத்திரன் இணைந்துள்ளது பிரேமம்படத்தின் ரீமேக்காக இருக்குமோ? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Post a Comment

 
Top