‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து
முடித்துள்ளார். அதன்பின்னர், ‘கண்ணா லட்டு
தின்ன ஆசையா’ பட இயக்குனர்
கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி
உழைக்கணும்’ படத்தில் நடித்து
வருகிறார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ‘அனேகன்’ பட நாயகி அம்ரியா தஸ்தூர் நடித்து வருகீறார்.
மேலும், யோகி பாபு, நான் கடவுள்
ராஜேந்திரன், சுவாமி நாதன், ஊர்வசி, மன்சூர் அலிகான், மயில்சாமி என ஒரு நகைச்சுவை பட்டாளமே
இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்காக சமீபத்தில் சென்னையில் அதிரடியான
ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
இந்த சண்டைக்
காட்சியில் வில்லனாக நடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது
மாதிரியான ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். இதில் டூப் இல்லாமல் மேலிருந்து
கீழே தலைகீழாக தொங்கியும், மிக உயரத்திற்கு
ஜம்ப் செய்தும் நடித்து யூனிட் ஆட்களின் கைதட்டலை பெற்றுள்ளார். சந்தானம்
கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கத.
இப்படத்தின்
படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் இணைந்து இப்படத்தை
தயாரித்து வருகின்றனர்.

Post a Comment