நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட சசிகுமார் சமீபகாலமாக நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கிடாரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கும் புதிய படமொன்றில் சசிகுமார் நடித்து வருகிறார். இதில் முக்கிய வேடங்களில் கோவை சரளா, தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.செப்டம்பர் 21-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இதுவரை பெயரிடப்படாமல் இருந்த இப்படத்துக்கு தற்போது 'பலே வெள்ளையத்தேவா' என பெயர் வைத்திருக்கிறார்கள்.


Post a Comment

 
Top