இந்தியாவின் பிரசித்தி பெற்ற விமான சேவை நிறுவனங்களில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. இதன் தெற்கு பிராந்தியத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காலியிட விபரம்:
ஆண்களுக்கு 75ம், பெண்களுக்கு 225ம் சேர்த்து மொத்தம் 300 கேபின் க்ரூ பணியிடங்களை நிரப்புவதற்கு ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வயது:
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இவர்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் இருப்பது தேவை.
பணி:
மேற்கண்ட கேபின் க்ரூ பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் அல்லது கோழிக்கோடு போன்ற பகுதிகளில் பணிபுரிய வேண்டியிருக்கும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2வுக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஓட்டல் மேனேஜ்மெண்ட் பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி:
மேற்கண்ட தகுதிகளுடன் விண்ணப்பதாரர்களுக்கு சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். மகளிர் விண்ணப்பதாரர்கள் 160 செ.மீ.,யும், ஆண் விண்ணப்பதாரர்கள் 172 செ.மீ.,யும் குறைந்தபட்ச உயரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஏர் இந்தியா நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100/-ஐ டி.டி., வாயிலாக AIR INDIA LIMITED என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்ச்சி முறை:
குரூப்டைனமிக்ஸ் மற்றும் பெர்சனாலிடி அசெஸ்மென்ட் டெஸ்ட் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
கடைசி நாள்:
2016 நவம்பர் 8.
விபரங்களுக்கு:

www.aai.aero/employment_ news/careers.jsp

Post a Comment

 
Top