சமந்தா- நாகசைதன்யா திருமணம் நடைபெறுவதாக வெளியான செய்திகளையடுத்து சமந்தா நடிப்பை தள்ளி வைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

விஷாலுடன் இரும்புத்திரைபடத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஆரண்யகாண்டம்தியாகராஜன் குமாரராஜா இயக்கும் விஜய்சேதுபதி படத்திலும் அவரது ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.


இது மட்டுமல்ல இப்போது சிவகார்த்திகேயனுடனும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Post a Comment

 
Top