கோகுல்
இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா,
ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும்
படம் 'காஷ்மோரா'. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து
வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து
வருகிறார். அக்டோபர் 28-ம் தேதி இப்படம்
திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தின் 3 கெட்டப்களில் நடித்திருக்கிறார் கார்த்தி.
காஷ்மோரா, ராஜ்நாயக்
மற்றும் இன்னொரு கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு.
இப்படம் குறித்து
கார்த்தி "பெரிய முதலீட்டில் படம் தயாரிப்பதற்கு, தயாரிப்பாளர்களிடையே பெரிய தயக்கம் இருக்கிறது.
கிராபிக்ஸ் காட்சிகள் தாமதமாகும் உள்ளிட்ட பல விஷயங்களில் அடங்கியிருக்கிறது. ஒரு
இயக்குநர் கூறும் கதையில் காமெடி, சுவாரஸ்யம்,
பிரம்மாண்டம் என
அனைத்துமே இருக்கும் போது ரிஸ்க் எடுத்து பார்க்கலாமே என்று ஆரம்பித்தது தான் 'காஷ்மோரா'.
நாங்கள் நினைத்தை
எடுக்கும் அளவுக்கு முதலீடு இங்கே கிடையாது. 'பாகுபலி' மாதிரி 200 கோடி முதலீட்டுக்கான மார்க்கெட் இங்கு
கிடையாது. எனக்கு இருக்கும் முதலீட்டில் கொஞ்சம் அதிகமாகத் தான் செய்திருக்கிறோம்.
நமது ஊரிலும் சரியாக திட்டமிட்டால் செய்ய முடியும் என்று செய்திருக்கிறோம்.
'தோழா' மற்றும் 'காஷ்மோரா' ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட படங்கள். கோகுலின் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை மிகவும் ரசித்தேன். ஒரு பேய் படம்
பண்ணலாம் என்று தான் ஆரம்பித்தோம். காஷ்மோரா, ராஜ்நாயக் என இரண்டு பாத்திரங்களைப் பற்றி
சொன்னார். இப்படத்தில் காமெடி, வரலாறு, பேய் என அனைத்துமே இருக்கிறது. 30 நிமிடங்கள் மட்டுமே வரலாற்றுக் காட்சிகள்
இருக்கும்.
படத்தின்
ட்ரெய்லரைப் பார்த்தால், சீரியஸாக
இருக்கும். ஆனால், படத்தில் காமெடி
தான் தூக்கலாக இருக்கும். நீங்கள் பார்க்கும் காஷ்மோராவுக்குள் ஒரு ப்ளாக் காமெடி
இருக்கிறது" என்று கார்த்தி கூறினார்.

Post a Comment