‘கபாலி’ படத்திற்கு பிறகு பா.ரஞ்சித், நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்
தொடங்கி ஆவணப் படங்களை தயாரித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் ஏற்கெனவே, ‘டாக்டர். ஷுமேக்கர்’ ‘சாதிகளிடம் ஜாக்கிரதை’ ஆகிய ஆவணப்படங்கள் உருவாகியுள்ளன.
இந்நிலையில், இவருடைய தயாரிப்பில் முழுநீள படம் ஒன்றை
தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் ‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’ ஆகிய படங்களில்
நடித்துள்ள கதிர் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவருடன் பல படங்களில் காமெடி வேடங்களில்
கலக்கி வரும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை
பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி என்பவர் இயக்குகிறார்.

Post a Comment