தெறி' படத்தைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் உருவாகி
வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
கீர்த்தி சுரேஷ், சதீஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன்
இசையமைத்து வருகிறார். விஜயா வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு
ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட
இடங்களில் நடைபெற்று முடிவுற்று இருக்கிறது. தற்போது ராஜமுந்திரியில் படத்தின்
முக்கிய இடத்தில் வரும் சண்டைக்காட்சியை படமாக்க கிளம்ப இருக்கிறது படக்குழு.
இப்படத்தின்
தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு முடிவு
செய்திருந்தது. அதற்கு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்
இணையத்தில் கசிந்திருக்கிறது.
'பைரவா' என்று படத்துக்கு தலைப்பிட்டு இருக்கிறது
படக்குழு. மேலும், அப்போஸ்டரில் 2017ம் ஆண்டு ஜனவரியில் வெளியீடு என்று
அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Post a Comment