யாக்கைஎன்ற படத்தில் வில்லனாக குரு சோமசுந்தரம் நடிக்கிறார். குழந்தை வேல்லப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் யாக்கைபடத்தை பிரிம் பிச்சர்ஸ் சார்பில் முத்துக்குமரன் தயாரிக்கிறார்.



 கிருஷ்ணா, சுவாதி உள்பட பலர் நடிக்கும் யாக்கை படத்துக்கு யுவன்‌ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இதுபற்றி கூறிய இயக்குனர் குழந்தை வேலப்பன், “நடிப்பிற்காக எந்த அவதாரம் வேண்டுமானாலும் எடுக்கும் கலைஞரான குரு சோமசுந்தரம் எங்கள் யாக்கைபடத்தில் நடிப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.


அதிரடி, மிரட்டல் என ஒரு சராசரியான வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வில்லனாக குரு சோமசுந்தரம் இந்த படத்தில் அற்புதமாக நடித்து வருகிறார். அவருடைய இந்த வில்லன் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெறும்என்றார்.

Post a Comment

 
Top