சூர்யா தற்போது
ஹரி இயக்கத்தில் ‘எஸ்-3’ படத்தில் பிசியாக
நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக
நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,
தற்போது இப்படத்தில் ‘பாகுபலி’ படத்தின் ஹீரோ பிரபாஸ் முக்கிய தோற்றத்தில்
நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இப்படத்தில்
சூர்யா நடித்து போலீஸ் வேடத்திலேயே பிரபாஸும் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தில் ஏற்கெனவே, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, சூரி, விவேக், ராதாரவி, ராதிகா சரத்குமார், தாகூர் அனூப் சிங் என மிகப்பெரிய நட்சத்திர
பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகுபலி ஹீரோ பிரபாஸும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக
வெளிவந்துள்ள செய்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படம்
தீபாவளி வெளியீடாக வெளிவரும் என எதிர்பார்த்திருந்த வேளையில், இன்னும் படப்பிடிப்பே முடியாத சூழ்நிலையில், இறுதிக்கட்ட
பணிகளுக்கு நேரம் ஒதுக்கவேண்டியுள்ளதால், படத்தின்
வெளியீடு அடுத்த வருடம்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Post a Comment