சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோபடம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்தாக மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.


விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் நடிகர், நடிகையர் தேர்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இரண்டு முன்னணி காமெடியன்களான ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர் நடிக்கின்றனர்.

Post a Comment

 
Top