தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் கொடி’. இப்படத்தை எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டைஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். கொடிபடத்தின் புகைப்படங்களோ, காட்சிகளோ இதுவரை படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகாத சூழ்நிலையில், தற்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.


அதன்படி வருகிற செப் 28-ந் தேதி மாலை கொடிபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்ஸ் இரண்டையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அந்த எதிர்பார்ப்பை இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Post a Comment

 
Top