சிவகார்த்திகேயன்
நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் இரண்டாவது
முறையாக சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப்பாளர் அனிருத் என மிகப்பெரிய
தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் கைகோர்த்துள்ளனர்.
சமீபத்தில்
இப்படத்தின் பாடல்களும், டிரைலரும்
வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் அக்டோபர் 7-ந் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர்
முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள்
தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில்,
தற்போது இப்படத்தின்
பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. இதையடுத்து, நாளை இப்படத்தை
தணிக்கை குழுவினருக்கு படக்குழுவினர் அனுப்ப உள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள்
இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் என்ன சான்றிதழ் வழங்குவார்கள் என்பது தெரிய
வந்துவிடும்.

Post a Comment