ராகவன் இயக்கத்தில் ஆர்யா, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கடம்பன்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 





இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு காடுகளுக்குள் நடைபெற்று வருகிறது.தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் அமீர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


மேலும், மலையாளத்தில் புதுமுக இயக்குநர் ஹானிஃப் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துவரும் 'தி கிரேட் ஃபாதர்' படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் ஆர்யா. கோபி சுந்தர் இசையமைக்க இருக்கும் இப்படத்தை ஆகஸ்ட் சினிமா நிறுவனம் தயாரித்து வருகிறது. ப்ருத்விராஜ், சந்தோஷ் சிவன், ஆர்யா மற்றும் ஷாஜி நடேசன் ஆகியோர் இணைந்து தொடங்கிய நிறுவனம் 'ஆகஸ்ட் சினிமாஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top