'கத்தி சண்டை'
படத்தின் படப்பிடிப்பு
முடிவுற்றதைத் தொடர்ந்து, மிஷ்கின்
இயக்கத்தில் உருவாகும் 'துப்பறிவாளன்'
படத்தில் கவனம் செலுத்தி
வருகிறார் விஷால்.
விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின்
படப்பிடிப்பு செப்டம்பர் 14ம் தேதி முதல்
சென்னையில் தொடங்கவிருக்கிறது.
ராகுல் ப்ரீத்
சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க
ஒப்பந்தமாகி இருக்கிறார். "8 வருடங்களுக்குப்
பிறகு மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். செப்டம்பரில்
படப்பிடிப்பு துவங்குகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்திருக்கிறார் பிரசன்னா.

Post a Comment