ஒரு
இந்தியனுக்கும் பாகிஸ்தானிக்கும் இடையில் உள்ள காதல் கதையை கையில்
எடுத்திருக்கிறார்.
கதைப்படி படித்து
முடித்துவிட்டு ஜாலியாக இருக்கும் விக்ரம் பிரபு அப்பாவின் கட்டாயத்தால் மளிகைக்
கடையில் வேலை செய்து வருகிறார். அப்பாவின் தொல்லையில் இருந்து எப்படி விடுபடலாம்
என்று காத்துக்கொண்டிருக்கும் அவருக்கு அவரது பெரியப்பா மகன் சத்யன் மூலமாக எல்லை
பாதுகாப்பு படைக்கு ஆள் எடுப்பது தெரிய வருகிறது. அங்கு சென்றால் எந்நேரமும் ‘சரக்கு’ கிடைக்கும் என்பதற்காக அதில் சேர
முடிவெடுக்கிறார் விக்ரம் பிரபு.
Actor Vikram Prabhu in Wagah Movie Stills
எல்லை பாதுகாப்புப்
படைக்கான ஆள் தேர்வில் விக்ரம் பிரபு மட்டும் தேர்வாகிறார். சத்யனை உடல் எடையை
காரணம் காட்டி நீக்குகின்றனர். அதன்பிறகு, இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணிக்கு செல்லும் விக்ரம் பிரபுவுக்கு அங்கு
தனிமை வாட்ட, சொந்த ஊரே
பரவாயில்லை என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பப் பார்க்கிறார்.
அப்போது, எதேச்சையாக நாயகி ரன்யா ராவை பார்க்க, அவள் மீது காதல் கொள்கிறார். அவளுக்காக எல்லை
பாதுகாப்பு படையிலேயே இருக்க முடிவு செய்கிறார்.
இந்நிலையில்
இந்திய, பாகிஸ்தான்
எல்லையில் பெரும் கலவரம் வெடிக்க, காஷ்மீரிலிருக்கும்
பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட, ரன்யா ராவும் பாகிஸ்தான் பயணமாகிறார். இடையில்
ரன்யா ராவுக்கு சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சினைகளில் இருந்து அவளைக்
காப்பாற்றி பாகிஸ்தானுக்குக் கூட்டிச் செல்லும் விக்ரம் பிரபு, அங்கு சிறை வைக்கப்படுகிறார். அங்கிருந்து அவர்
தப்பித்து வந்தாரா, தனது காதலியைக் கரம்பிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.
படத்துக்குப்படம்
மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு இப்படத்திலும் மாறுபட்ட
கேரக்டர். தோற்றத்தில் அச்சு அசலாக எல்லை பாதுகாப்பு படை வீரர் போல் இருக்கிறார். 6 அடி உயரம், அகன்ற மார்பு என ஒரு போர் வீரருக்கான
உடல்வாகுடன் இந்தக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதுடன் அதிரடி ஆக்ஷன்
காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார்.
wagah 1
பாகிஸ்தான்
பெண்ணாக வரும் ரன்யா ராவும் அவருடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக
பொருந்தியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க இவரைச் சுற்றித்தான் பயணிப்பதால் படம்
முழுக்க வருகிறார். கதையின் ஆழம் மற்றும் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக
நடித்திருக்கிறார்.
பாகிஸ்தான்
இராணுவ அதிகாரியாக வரும் ஷாஜி சௌத்ரி மிரட்டலான நடிப்பில் கவர்கிறார். மற்றபடி
படத்தில் நடித்திருக்கும் கருணாஸ், அஜய் ரத்னம்,
ராஜ்கபூர், சத்யன், வித்யுலேகா ஆகியோர் சில காட்சிகளில் மட்டும்
வந்துவிட்டு போகிறார்கள்.
டி.இமானின்
இசையில் பாடல்கள் படத்திற்கு பெரிய வலு சேர்க்காவிட்டாலும், பின்னணி இசையில் வழக்கம்போல்
மிரட்டியிருக்கிறார். விக்ரம் பிரபு பாகிஸ்தான் சிறையில் தப்பிக்க நினைக்கும்
காட்சிகளில் எல்லாம் இவரது பின்னணி இசை நம்மையும் அந்த காட்சியோடு ஒன்ற வைக்கிறது.
சதீஷ்குமாரின்
ஒளிப்பதிவு காஷ்மீரை அழகாகக் காட்டியிருக்கிறது. லால்குடி இளையராஜாவின் பாகிஸ்தான்
அரங்குகள் உண்மையான பாகிஸ்தானுக்குள் நுழைந்த அனுபவத்தை கொடுக்கிறது.
Wagah-movie-images-11-872x600
ராணுவ வீரர்
என்றாலே போரின் போது மட்டும்தான் அவர்களுக்கு வேலை, மற்ற சமயங்களில் சரக்கு அடித்துவிட்டு, பார்ட்டி கொண்டாடி பொழுதை கழிப்பார்கள்
என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், வீடு, சொந்தம், பந்தம் என
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நாட்டிற்காக
எல்லையில் யாரும் இல்லாத தனிமையில் வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு படும்
அவர்கள் படும் அவஸ்தையான வாழ்க்கையை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்
ஜி.என்.ஆர்.குமரவேலன்.
ஆனால் அதை நம்
மனதில் பதியும்படியான ஒரு அழுத்தமான திரைக்கதையுடன் பதிவு செய்வதில்
தடுமாறியிருக்கிறார். காஷ்மீர் எல்லைப் பகுதி, இராணுவம், பதற்றம் என்று துவங்கும் படம் ஏதோ சொல்ல
வருகிறது என்று எதிர்பார்த்தால் நேசித்த பெண்ணைக் கைப்பிடிக்கப் போராடும் வழக்கமான
ஒரு இளைஞனின் அடிதடி ஆக்ஷன் கதையாகவே இந்த ‘வாகா’ பயணிக்கிறது.

Post a Comment