இணைப்புச்
சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய: வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும்,
இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து
அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும்
ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully))
தொடங்குகின்றனவா
என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில்
சிறப்பானதாகும். இது போன்ற வாக்கியங்களை சோதனை செய்து, அதில் அவை இருப்பதனை அறிந்தால்,
வேர்ட் சுட்டிக் காட்ட
வேண்டும் என எண்ணினால், கீழே தந்துள்ளபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. முதலில் Word Options டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து,
கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இங்கு
இடதுபுறமாக உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
3. இங்கு
தரப்பட்டிருக்கும் Options பட்டியலில், ஸ்குரோல் செய்து
செல்லவும்.
4. ஸ்டைல்
பிரிவில், Sentences Beginning
with And, But, and Hopefully என்று இருப்பதைக்
காணவும். இதில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
5. தொடர்ந்து, Grammar Settings டயலாக் பாக்ஸினையும், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸையும் மூடி வெளியேறவும்.
இனி, நீங்கள் அமைக்கும் வாக்கியங்களின் தொடக்கத்தில், இணைப்புச்
சொற்கள் இருப்பின், அதனை வேர்ட் சிறிய ப்ளாக் மூலம் சுட்டிக்
காட்டும்.
செவ்வக வடிவில்
டெக்ஸ்ட் செலக்ஷன்: வேர்ட் புரோகிராமில், சிலவகை
டேட்டாவினைப் பயன்படுத்துகையில்,
குறிப்பாக டேபிள்களை
அதிகம் பயன்படுத்துகையில், தொடர்ந்து அமையாமல், ஆங்காங்கே உள்ள டேட்டாவினை தனித்தனியே தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.
எடுத்துக் காட்டாக, ஐந்து வரிகளில், பத்தாவது
கேரக்டர் முதல் பதின்மூன்றாவது கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம்.
மற்றவற்றை விட்டுவிட்டு, இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கலாம்.
அப்போது கீ போர்ட் மூலம், குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை, டேட்டாவினை எப்படி தேர்ந்தெடுப்பது எனக் காணலாம்.
1. நீங்கள்
தேர்ந்தெடுக்க விரும்பும் டெக்ஸ்ட் பகுதியின், இடது மேல்
மூலையில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. அடுத்து Ctrl+Shift+F8 அழுத்தவும். பின்னர், அப்படியே நீங்கள் எந்த கேரக்டர் வரை கர்சரை நீட்ட வேண்டுமோ, அது வரை கொண்டு சென்று, அப்படியே கீழே இழுக்கவும். இதற்கு மவுஸைக் கூட
நீங்கள் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், Alt கீ அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.
3. தேர்ந்தெடுத்து
முடித்த பின்னர், வழக்கம்போல, நீங்கள்
தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை என்ன என்ன மாற்றங்களுக்கு உட்படுத்துவீர்களோ, அவ்வளவும் பயன்படுத்தலாம். காப்பி செய்திடலாம். பேஸ்ட் செய்திடலாம். இன்னொரு
இடத்திற்குக் கொண்டு செல்லலாம். நீக்கலாம்.
நன்றி : முகநூல்
நன்றி : முகநூல்
Post a Comment