சிவகார்த்திகேயனின்ரஜினி முருகன் படம்
இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு
மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. தொடர்ந்து
மூன்று வாரம் படப்பிடிப்பை நடத்தி ஏப்ரம் 17-ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.இப்படத்தில்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சில நாட்களாக உடல்
நிலை பாதிக்கப்பட்ட இவர் இறுதி கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்துக் கொள்வார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இமான் இசையமைக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். திருப்பதி
பிரதர்ஸ் தயாரித்து வருகிறது. ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன்
இப்படத்தை வெளியிடுகிறது.

Post a Comment