கோலிசோடா’ இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.விறுவிறுப்பாக
நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் சென்னையில்
நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து நேபாளில் இப்படத்தின் சில காட்சிகளை படமாக்க
உள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு முடிவடையும் என தெரிகிறது.
இப்படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம்
நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தை ஜூன் மாதத்தில்
தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என
தெரிகிறது.இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்தவுள்ளதாக
கூறப்படுகிறது. பெரும்பகுதி காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கிவிட்டு, அதன்பிறகு சென்னையில் மீதிப் பகுதிகளை
படமாக்கப் போகிறாராம் கௌதம் மேனன்.

Post a Comment