ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், 3டி கேமிராவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட படம் என்பதால், இதற்கு கிராபிக்ஸ் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. இதற்காக உலகம் முழுவதும் சுமார் 13 நிறுவனங்கள் பணியாற்றி வருகிறார்கள். Read More..



சமீபத்தில் '2.0' இசை வெளியீடு துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவிலும் ஜனவரி வெளியீடு என்பதை படக்குழு உறுதி செய்தது. ஆனால், தற்போது ஹைதராபாத்தில் இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த டீஸர் வெளியீட்டு விழாவை ஒத்தி வைத்துள்ளது படக்குழு. இதனால் ஜனவரியில் '2.0' வெளியீடு இருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது, "’2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இந்த தேதியில் முடிவடையும் என்று கூற இயலாத நிலையில் உள்ளது. மேலும், படத்தின் பிரத்யேகக் காட்சிகளின் கிராபிக்ஸ் பணிகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளன.

3டி கேமிராவில் படப்பிடிப்பு செய்துள்ளதால் WIDE ANGLE-ல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இதன் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து படத்தோடு இணைந்து கலரிங் செய்வது கடினமாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு காட்சியுமே சரியாக வரவேண்டும் என்று உழைத்து வருகிறது படக்குழு.

படத்தின் வெளியீட்டைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலவரப்படி ஜனவரி வெளியீடு என்பது சாத்தியமில்லை எனத் தெரிகிறது. கிராபிக்ஸ் பணிகள் முடிவடைவதைப் பொறுத்தே, வெளியீட்டு தேதியை படக்குழு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்கள்.


Post a Comment

 
Top