தேவையான
பொருட்கள்:
மட்டன் - அரை
கிலோ
சின்ன வெங்காயம்
- 1/2 கிலோ
தக்காளி - 1
மல்லி தூள் - 2
டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1
டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1
டீஸ்பூன்
சீரகம் - 1
டீஸ்பூன்
சோம்பு - 1
டீஸ்பூன்
கசகசா - 1
டீஸ்பூன்
தேங்காய் - 1
மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு
பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை -
சிறிது
எண்ணெய் -
தேவையான அளவு
உப்பு - தேவையான
அளவு
செய்முறை:
* வெங்காயம்,
தக்காளியை பொடியாக
நறுக்கி கொள்ளவும்.
* மட்டனை நன்கு
கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* குக்கரை
அடுப்பில் வைத்து, அதில் கழுவி
வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள்,
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 7 விசில் விட்டு
இறக்கி வைக்கவும்..
* ஒரு வாணலியை
அடுப்பில் வைத்து, அதில் சிறிது
எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது
கறிவேப்பிலை, சீரகம் மற்றும்
மிளகு சேர்த்து வறுத்து, தனியாக
வைக்கவும்.
* அதே வாணலியில்
உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
* மற்றொரு கடாயை
அடுப்பில் வைத்து, அதில் சோம்பு,
கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
* பின் வதக்கிய
அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே கடாயை
அடுப்பில் வைத்து, அதில் சிறிது
எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து
தாளித்த பின்னர் மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக
வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
* வெங்காயம் நன்கு
வதங்கியதும், அதில் நறுக்கிய
தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
பின் வேக வைத்துள்ள
மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட
வேண்டும்.
* குழம்பு நன்றாக
கொதிக்க ஆரம்பித்தவுடன் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து,
உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* இறுதியில் நைஸாக
அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு
இறக்கவும்.
* அருமையான சேலம்
மட்டன் குழம்பு ரெடி!!!
Post a Comment