ஜூன் 27,
பழனி
அருகே தொப்பம்பட்டியில் பேருந்து நிலையம் அருகே அதன் சுற்றுவட்டார விவசாய
பெருமக்கள் கீரனூர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த
ஆர்ப்பாட்டம் பூசரிகவுண்டன் வாசு பகுதியில் விவசாயி ஒருவரின் பசு மாடு காணாமல்
போனதாக கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.எனினும் புகாரின்
அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கபடவில்லை அதனை கண்டித்தும்.
அதுமட்டுமின்றி காவல்நிலைய அதிகாரிகள்
வாகனதணிக்கை என்னும்
பெயரில் விவசாய பொதுமக்களிடம் பணம் பரிபதாக
விவசாயிகள் புகார் கோரினர்.
இந்த ஆர்ப்பாட்டதில் தொப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதியான வாகரை மரிச்சிலம்பு,அபநூத்து,கந்தப்பகவுண்டன்வலசு,ஆலாவலசு,சரவணபட்டி,தேவதாகுடிவலசு,மார்கண்டாபுரம்,பூலாம்பட்டி ஊர் விவசாய பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.
அதுமட்டுமின்றி அனைத்து கிராமங்களிலும் பண்டைய கால காவல் முறையான பண்டு
குழு அமைப்பது என்றும் விரைவில் அதற்க்கு பொறுப்பளர்கள் நியமிக்கபடுவார்கள் என
முடிவு செய்யப்பட்டது.





Post a Comment