தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண
விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகள்
செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து,
தலைமைச் செயலாளர் கிரிஜா
வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:
நேரடி எழுத்துத்
தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை
நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம்
மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத்
தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.
சார்புப்
பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள்,
நீதி அமைச்சுப் பணிகள்,
தமிழ்நாடு தலைமைச்
செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்நிலைத்
தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம்
ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும்
வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில்
இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள்
அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல்
நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

Post a Comment