ராகுல் பிரீத்
சிங் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் ‘தடையற தாக்க’ ‘புத்தகம்’ படங்களில் நடித்தார். பெரிய வாய்ப்புகள்
வராததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு பிரபல ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்புகள்
கிடைத்தன. தெலுங்கு படஉலகின் முன்னணி நடிகை ஆனார். இதனால் தமிழ் பட உலகில் இருந்து
மீண்டும் அழைப்புக்கள் வந்தன.
ஆனால் தெலுங்கில்
பிசியாக இருந்ததால் தமிழ் படங்களை அவரால் ஏற்க முடியவில்லை. தற்போது தமிழ், தெலுங்கில் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக
ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம்
ஒன்று’ படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து செல்வராகவன்
இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் ராகுல் பிரீத்தி சிங்கை
நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Post a Comment