தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும்  வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. இப்படத்தை இயக்குநர் வேல்ராஜ் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இப்படத்தின் 2-வது பாகம் வேகமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு  மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
`விஐபி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகை கஜோல் தனது இன்ஸ்டோகிராம் பக்கத்தில் "விஐபி-படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது இறுதிகட்ட படப்பிடிப்பை இன்று முடித்து விட்டேன்படக்குழுவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.


Post a Comment

 
Top