இந்தியா -
ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்
பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா முதல்
இன்னிங்சில் 189 ரன்னில்
சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
பின்னர் முதல்
இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்
இழப்பிற்கு 237 ரன்கள்
சேர்த்திருந்தது. வடே 25 ரன்னுடனும்,
ஸ்டார்க் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து
விளையாடிய ஆஸ்திரேலியா 276 ரன்னில் ஆல்
அவுட் ஆனது. இந்தியாவை விடை 87 ரன்கள் முன்னிலை
பெற்றிருந்தது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள்
வீழ்த்தினார்.
தற்போது வரை
இந்தியா 35 ரன்கள் மட்டுமே
முன்னிலைப் பெற்றுள்ளது. புஜாரா 34 ரன்னுடனும்,
ரகானே 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். புஜாரா நீண்ட
இன்னிங்ஸ் விளையாடி, இந்தியா 150
ரன்கள் முன்னிலைப்
பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்கலாம்.

Post a Comment