பிஎஸ்என்எல்
நிறுவனம் தனது அன்லிமிட்டெட் திட்டங்களை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாகவும்,
புதிய திட்டங்களில்
கூடுதல் சலுகைகளை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ
கட்டண திட்டங்கள் விரைவில் துவங்க இருக்கும் நிலையில் புதிய முடிவு ஜியோவுடனான
போட்டியை எதிர்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய
திட்டத்தின் படி ரூ.99 செலுத்தும் போது
அன்லிமிட்டெட் ஆன்-நெட் கால்ஸ் (ஒரே நெட்வொர்க்களுடன் அழைப்பது) மற்றும் 500 எம்பி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இதே
திட்டத்தில் அன்லிமிட்டெட் ஆன்-நெட் கால்ஸ் மற்றும் 300 எம்பி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது.
இதே போல் ரூ.339
திட்டமும்
மாற்றியமைக்கப்பட உள்ளது. முன்னதாக இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்
மற்றும் 1ஜிபி டேட்டா 28
நாட்களுக்கு
வழங்கப்பட்டது. தற்சமயம் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த
திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment